சினிமா

ஜி.வி.பிரகாஷின் `100% காதல்' ரிலீஸ் அறிவிப்பு

Published On 2017-12-25 15:19 IST   |   Update On 2017-12-25 15:19:00 IST
சந்திரமெளலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி வரும் `100% காதல்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் பிசியான நடிகர்களுள் ஒருவராக மாறியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். 

அவரது நடிப்பில் `செம', `அடங்காதே', `நாச்சியார்', `குப்பத்து ராஜா' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. `4ஜி', `ஐங்கரன்', `100% காதல்', `ரெட்ட கொம்பு', `சர்வம் தாள மயம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இதில் `100% காதல்' படத்தை சந்திரமௌலி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். நாசர், ஜெயசித்ரா, ஷிவானி படேல், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் விதமாக படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



இந்த படத்தை கிரியேஷன் சினிமாஸ் என்.ஒய் என்.ஜே என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த 2011-ல் தெலுங்கில் வெளியான `100% லவ்' படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News