சினிமா

தம்பி ராமைய்யா இயக்கத்தில் `உலகம் விலைக்கு வருது'

Published On 2017-11-02 10:41 IST   |   Update On 2017-11-02 10:41:00 IST
நடிகராக பிசியாக இருக்கும் தம்பி ராமைய்யா நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனது மகனை வைத்து `உலகம் விலைக்கு வருது' என்ற படத்தை இயக்குகிறார்.
`மனுநீதி', `இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படங்களைத் தொடர்ந்து தம்பி ராமைய்யா அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

தம்பி ராமைய்யாவின் மகனான உமாபதி அறிமுகமான `அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், உமாபதியை வைத்து தானே படம் ஒன்றை இயக்க தம்பி ராமைய்யா முடிவு செய்து அதற்கு `உலகம் விலைக்கு வருது' என்ற தலைப்பு வைத்திருக்கிறார்.

மிருதுளா முரளி, ஜெயப்பிரகாஷ், சமுத்திரக்கனி, ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், விவேக் பிரசன்னா, மொட்டை ராஜேந்திரன், பவர் ஸ்டார் சீனிவாசன், சாமிநாதன், சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.



தொடக்கத்தில் பாடல் காட்சிகளை படமாக்கி வரும் தம்பி ராமைய்யா அடுத்த கட்ட படப்பிடிப்புகளை தென்காசி, குற்றாலம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு தினேஷ் இசையமைக்கிறார்.

Similar News