சினிமா

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் மஞ்சிமா மோகன்

Published On 2016-05-22 13:10 IST   |   Update On 2016-05-22 13:10:00 IST
சிம்புவுக்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்து வரும் மஞ்சிமா மோகன், தனது அடுத்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
சிம்பு நடிப்பில் கவுதம்மேனன் இயக்கி வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் கதாநாயகி மஞ்சிமா மோகன். முதல் படத்திலேயே இவர்மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். இந்நிலையில், இப்படம் வெளிவருவதற்கு முன்பே, மற்றும் ஒரு படத்தில் நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

செல்லா என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் மஞ்சிமா மோகன் நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளார். டி.இமான் இசையமைக்கவிருக்கும் இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் சகோதரர் சரவணன் தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அடுத்த மாதம் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. 

Similar News