ஆட்டோமொபைல்

இந்தியாவில் மெர்சிடிஸ் புதிய கார் அறிமுகம்

Published On 2019-03-16 12:22 GMT   |   Update On 2019-03-16 12:22 GMT
மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய AMG C43 கூப் காரை அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் முதல் AMG 43 சீரிஸ் மாடல் ஆகும். #Mercedes



ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் இந்தியாவில் AMG C43 கூப் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய மெர்சிடிஸ் AMG C43 கூப் மாடலின் விலை ரூ.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் முதல் AMG 43 சீரிஸ் கார் ஆகும்.

மெர்சிடிஸ் AMG C43 கூப் மாடலில் 3.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 385 பி.ஹெச்.பி. @6100 ஆர்.பி.எம். மற்றும் 520 என்.எம். டார்க் @2500-5000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் அதன் முந்தைய மாடல்களை விட 23 பி.ஹெச்.பி. வரை அதிக செயல்திறன் வழங்குகிறது.

இந்த என்ஜின் நான்கு சக்கரங்களுக்கும் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் வசதியை வழங்குகிறது. இதன் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் காரின் முன்புற சக்கரங்களுக்கு 31 சதவிகித திறனையும், பின்புற சக்கரங்களுக்கு 69 சதவிகித செயல்திறனை வழங்குகிறது. 



இதனால் புதிய மெர்சிடிஸ் AMG C43 மாடல் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.7 நொடிகளில் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வடிவமைப்பை பொருத்தவரை புதிய AMG C43 கூப் முந்தைய மாடல்களை விட மேம்பட்ட மாடல் ஆகும். அந்த வகையில் புதிய கார் பார்க்க முந்தைய செடான் போன்றே காட்சியளிக்கிறது. காரின் முன்புறம் பெரிய மெர்சிடிஸ் சின்னமும், ட்வின் இரிடியம் சில்வர் லோவிர்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 

பின்புறம் ரூஃப்லைன் பார்க்க அழகாக காட்சியளிக்கிறது. மெர்சிடிஸ் AMG C43 கூப் மாடலில் 18-இன்ச் AMG 5-ஸ்போக் லைட் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. காரின் உள்புறம் 3-ஸ்போக் பிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய கூப் காரின் இருக்கைகள் ஆர்டிகோ லெதர் அல்லது டினாமிகா மைக்ரோஃபைபர் என இருவித ஆப்ஷன்களில் டூயல் காண்ட்ராஸ்ட் ஸ்டிட்ச்சிங் உடன் வருகிறது. இத்துடன் 12.3 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News