கார்

530கி.மீ. ரேன்ஜ் கொண்ட வால்வோ C40 ரிசார்ஜ் - இந்திய முன்பதிவு துவக்கம்

Published On 2023-09-06 09:59 GMT   |   Update On 2023-09-06 09:59 GMT
  • வால்வோ C40 ரிசார்ஜ் மாடல் மொத்தத்தில் ஆறுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.
  • வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது.

வால்வோ இந்தியா நிறுவனம் தனது முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. C40 ரிசார்ஜ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் வால்வோ C40 ரிசார்ஜ் மாடல் விலை ரூ. 61 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய வால்வோ C40 ரிசார்ஜ் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் வினியோகம் துவங்க இருக்கிறது.

வால்வோ C40 ரிசார்ஜ் மாடல்- ஆனிக்ஸ் பிளாக், க்ரிஸ்டன் வைட், ஃபியுஷன் ரெட், கிளவுட் புளூ, ஜோர்ட் புளூ மற்றும் சேஜ் கிரீன் என்று ஆறுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. இரட்டை மோட்டார் செட்டப் கொண்டிருக்கும் வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

 

இதில் உள்ள இரட்டை மோட்டார்கள் ஒவ்வொரு ஆக்சில்களில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இரு மோட்டார்கள் இணைந்து 402 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.7 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 530 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

அம்சங்களை பொருத்தவரை புதிய வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் 9- இன்ச் அளவில் கூகுள் சார்ந்த டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேடிக் டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

Tags:    

Similar News