கார்

ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் டொயோட்டா ருமியன் இந்தியாவில் அறிமுகம்!

Published On 2023-08-28 09:51 GMT   |   Update On 2023-08-28 09:51 GMT
  • டொயோட்டா ருமியன் மாடல் ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.
  • ருமியன் எம்பிவி மாடலில் K சீரிஸ் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது ருமியன் எம்.பி.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டொயோட்டா ருமியன் விலை ரூ. 10 லட்சத்து 29 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது மாருதி சுசுகி எர்டிகா மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

இந்திய சந்தையில் புதிய டொயோட்டா ருமியன் மாடல் ஐந்து வித நிறங்கள் மற்றும் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய ருமியன் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். எர்டிகா மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் போதிலும், ருமியன் மாடலின் ஸ்டைலிங் காரணமாக சற்று வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கிறது.

 

அந்த வகையில் ருமியன் மாடலின் முன்புறம் வித்தியாசமான முன்புற கிரில், மெஷ் பேட்டன், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், பம்ப்பர்கள் மற்றும் அலாய் வீல்கள் ரிடிசைன் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாற்றங்கள் தவிர, ருமியன் மாடல்- ஸ்பன்கி புளூ, கஃபே வைட், என்டைசிங் சில்வர், ரஸ்டிக் பிரவுன் மற்றும் ஐகானிக் கிரே என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

புதிய ருமியன் மாடலின் உள்புறம் ஏழு பேர் அமரும் வகையிலான இருக்கை அமைப்புகள், டூயல் டோன் பெய்க் மற்றும் பிளாக் தீம், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ருமியன் எம்பிவி மாடலில் K சீரிஸ் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் CNG வேரியன்ட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 102 ஹெச்பி பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதன் CNG வேரியன்ட் 87 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News