கார்

ருமியன் எம்.பி.வி. மாடலுக்கான முன்பதிவை திடீரென நிறுத்திய டொயோட்டா.. ஏன் தெரியுமா?

Published On 2023-09-24 05:45 GMT   |   Update On 2023-09-24 05:45 GMT
  • டொயோட்டா ருமியன் எம்.பி.வி. மாருதி சுசுகி எர்டிகா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
  • டொயோட்டா ருமியன் எம்.பி.வி. மாடல் ஐந்து விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது ருமியன் எம்.பி.வி. மாடலின் CNG வேரியண்ட் முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது. இந்த எம்.பி.வி. மாடலுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், வினியோகத்திற்கான காத்திருப்பு காலம் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாகவே இந்த காருக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டு இருக்கிறது.

தற்போது CNG வேரியண்ட் முன்பதிவு மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ருமியன் பெட்ரோல் வேரியண்ட் வாங்க விரும்புவோர், முன்பதிவு செய்ய முடியும். டொயோட்டா ருமியன் எம்.பி.வி. மாடல் மாருதி சுசுகி எர்டிகா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வேரியண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்திய சந்தையில் டொயோட்டா ருமியன் மாடல் S, G மற்றும் V என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் ஸ்பன்கி புளூ, கஃபே வைட், என்டைசிங் சில்வர், ஐகானிக் கிரே மற்றும் ரஸ்டிக் பிரவுன் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

டொயோட்டா ருமியன் எம்.பி.வி. மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 102 ஹெச்.பி. பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News