கார்

ஹிலக்ஸ் மாடலுக்கு ரூ. 3 லட்சம் வரை விலை குறைப்பு - டொயோட்டா அதிரடி!

Update: 2023-03-17 11:10 GMT
  • டொயோட்டா ஹிலக்ஸ் மாடலின் ஸ்டாண்டர்டு 4x4 MT வேரியண்ட் விலை அதிரடியாக மாற்றப்பட்டது.

டொயோட்டா இந்தியா நிறுவனம் ஹிலக்ஸ் பிக்கப் டிரக் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. ஹிலக்ஸ் ஸ்டாண்டர்டு மற்றும் ஹை வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் ஸ்டாண்டர்டு MT வேரியண்ட் விலை ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஹை MT மற்றும் ஹை AT வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

விலை மாற்றத்தின் படி டொயோட்டா ஹிலக்ஸ் மாடலின் துவக்க விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என மாறி இருக்கிறது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஹிலக்ஸ் மாடலின் இரண்டாவது கட்ட யூனிட்களுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய சந்தையில் ஹிலக்ஸ் மாடல் இசுசு டி மேக்ஸ் வி கிராஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இதில் டபுள் கேபின், மஸ்குலர் முன்புறம், க்ரோம் ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

ஹிலக்ஸ் மாடலில் ஃபார்ச்சூனரில் வழங்கப்பட்டு இருக்கும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 210 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. ஹிலக்ஸ் மாடல் 4-வீல் டிரைவ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது.

விலை விவரங்கள்:

டொயோட்டா ஹிலக்ஸ் ஸ்டாண்டர்டு 4x4 MT ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம்

டொயோட்டா ஹிலக்ஸ் ஹை 4x4 MT ரூ. 37 லட்சத்து 15 ஆயிரம்

டொயோட்டா ஹிலக்ஸ் ஹை 4x4 AT ரூ. 37 லட்சத்து 90 ஆயிரம்

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News