கார்

இதுவரை இல்லாத வளர்ச்சி - விற்பனையில் அசத்திய டாடா மோட்டார்ஸ்

Update: 2022-08-02 08:57 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஜூலை மாத வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
  • அதன் படி டாடா நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் 57 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூலை 2022 மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அதன் படி டாடா வாகன விற்பனை கடந்த ஆண்டை விட அதிகரித்து இருக்கிறது. ஜூலை 2022 மாதத்தில் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 47 ஆயிரத்து 505 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் டாடா நிறுவனம் 30 ஆயிரத்து 184 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் டாடா நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை 57 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக நெக்சான் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் தொடர்ந்து நீடிக்கிறது.


ஒட்டுமொத்த சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் கார்களின் முதல் ஐந்து மாடல்களில் ஒன்றாக டாடா நெக்சான் இருக்கிறது. நெக்சான் தவிர பன்ச் மற்றும் அல்ட்ரோஸ் போன்ற மாடல்களும் அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகின்றன. ஜூலை 2022 மாத விற்பனையில் 64 சதவீதம் எஸ்யுவி-க்கள் மட்டும் அடங்கும். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 105 சதவீதம் அதிகம் ஆகும்.

டாடா பன்ச் மைக்ரோ எஸ்யுவி மாடல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த கார் ஆல்பா பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட இரண்டாவது மாடல் ஆகும். இந்த கார் மட்டும் 11 ஆயிரத்து 007 யூனிட்கள் விற்பனையானது. 

Tags:    

Similar News