கார்

விற்பனையில் மாஸ் காட்டிய டாடா பன்ச் - அதற்குள் இத்தனை யூனிட்களா?

Published On 2022-08-12 09:49 GMT   |   Update On 2022-08-12 09:49 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டாடா பன்ச் மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
  • டாடா பன்ச் மாடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

டாடா மோட்டசார்ஸ் நிறுவனம் தனது பன்ச் மாடல் இந்திய விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா பன்ச் பத்து மாதங்களில் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறது. டாடா பன்ச் ஒரு லட்சமாவது யூனிட் அந்நிறுவனத்தின் பூனே ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது.

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட போது டாடா பன்ச் விலை ரூ. 5 லட்சத்து 93 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 9 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. டாடா பன்ச் மாடல் பியூர், அட்வென்ச்சர், அகம்ப்லிஷ்டு, கிரியேடிவ் மற்றும் காசிரங்கா என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.


இந்த கார் ஆர்கஸ் வைட், டேடோனா கிரே, டிராபிக்கல் மிஸ்ட், அடோமிக் ஆரஞ்சு, மீடியோர் பிரான்ஸ், டொர்னாடோ புளூ மற்றும் கலிப்சோ ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச அளவில் நடத்தப்படும் குளோபல் NCAP சோதனையில் டாடா பன்ச் மாடல் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தி இருக்கிறது.

டாடா பன்ச் மாடல் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 85 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் AMT யூனிட் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது. இந்த கார் முறையே லிட்டருக்கு 18.82 கிமீ மற்றும் 18.97 கிமீ மைலேஜ் வழங்குகிறது. 

Tags:    

Similar News