கார்

டாடா நெக்சான் மாடலுக்கு திடீர் விலை உயர்வு

Update: 2022-11-29 10:03 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது.
  • விலை உயர்வு நெக்சான் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது நெக்சான் மாடல் விலையை உயர்த்த போவதாக அறிவித்து இருந்தது. அந்த வகையில், நெக்சான் மாடலின் புதிய விலை விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. விலை உயர்வின் படி சில வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. டாடா நெக்சான், XZ, XZA, XZ+ (O), XZA+ (O), XZ+ (O) டார்க் மற்றும் XZA + (O) டார்க் என ஆறு வேரியண்ட்கள் நிறுத்தப்பட்டு விட்டன.

மற்ற வேரியண்ட்களான ஜெட், காசிரங்கா மற்றும் டார்க் எடிஷன் முன்பை போன்றே தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்றன. நிறுத்தப்பட்ட வேரியண்ட்களுக்கு மாற்றாக XZ+ (HS), XZ+ (L), XZ+ (P), XZA+ (HS), XZA+ (L) மற்றும் XZA+ (P) போன்ற வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புது வேரியண்ட்களில் எந்த விதமான புது அம்சங்களும் சேர்க்கப்படவில்லை.

விலை உயர்வின் படி டாடா நெக்சான் பெட்ரோல் வேரியண்ட் விலை குறைந்த பட்சமாக ரூ. 6 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. நெக்சான் டீசல் வேரியண்ட்களின் விலை குறைந்தபட்சமாக ரூ. 10 ஆயிரம் துவங்கி அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாடா நெக்சான் பெட்ரோல் மாடல் விலை தற்போது ரூ. 7 லட்சத்து 69 ஆயிரத்து 900 என துவங்குகிறது.

டாடா நெக்சான் பெட்ரோல் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 62 ஆயிரத்து 900 ஆகும். டாடா நெக்சான் டீசல் வேரியண்ட் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 17 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News