கார்

ஒரே காலாண்டில் இத்தனை லட்சங்களா? டாடா மோட்டார்ஸ் அதிரடி

Published On 2022-07-11 05:01 GMT   |   Update On 2022-07-11 05:01 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காலாண்டு விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
  • இந்த விற்பனையில் வர்த்தக வாகனங்களும் அடங்கும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் 3 லட்சத்து 16 ஆயிரத்து 443 வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தத்தில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 250 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.


இதில் பயணிகள் வாகன விற்பனை 2 லட்சத்து 12 ஆயிரத்து 914 யூனிட்கள் ஆகும். இது கடந்த ஆண்டு வெறும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 780 யூனிட்களாக இருந்தது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சர்வதேச சந்தையில் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சியை ஒட்டி ஏற்பட்ட மாற்றங்களை குறிக்கிறது.

உள்நாட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதத்தில் மட்டும் 45 ஆயிரத்து 197 தனியார் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 125 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் எஸ்.யு.வி.-க்கள் மட்டும் 68 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்தன. இதே காலக்கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 9 ஆயிரத்து 283 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.

Tags:    

Similar News