கார்

கார் மாடல்களுக்கு சூப்பர் சலுகைகள் அறிவித்த டாடா மோட்டார்ஸ் - இவ்வளவு பலன்களா?

Update: 2022-08-05 09:19 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஓனம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
  • தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அதிக பலன்கள் வழங்கப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை ஓனம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் மட்டும் வழங்கப்படுகிறது. டாடா ஹேரியர், சபாரி போன்ற மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 60 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

அல்ட்ரோஸ் மற்றும் டியாகோ போன்ற மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி ஓனம் பண்டிகைக்காக கார் முன்பதிவு செய்து இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் 95 சதவீதம் வரை ஆன்-ரோடு பைனான்ஸ் வசதியை வழங்குகிறது.

இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் PSU-க்கள், தனியார் மற்றும் வட்டார நிதி வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான நிதி சலுகைகள் கிடைக்கிறது.


"இந்த பகுதியில் வளர்ச்சியை சீராக வைத்துக் கொள்ள தலைசிறந்த வாய்ப்புகளை வழங்குவதால் கேரளா மிக முக்கிய சந்தை ஆகும். தொடர்ந்து வாடிக்கையாளர் சேவைக்கு முன்னுரிமை கொடுப்பதால், 72 சதவீத வாடிக்கையாளர்கள் வேறு பிராண்டிற்கு மாறாமல் உள்ளனர். இது நாட்டிலேயே மிகவும் அதிகம் ஆகும். நாங்கள் எங்களின் வாடிக்கையாளர்களுடன் ஓனம் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதற்காக நாங்கள் புது சலுகைகளை அறிவித்து இருக்கிறோம்."

"ஓனம் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் எங்களின் முற்றிலும் புதிய கார் மாடல்களுடன் புதிய தொடக்கத்திற்கு ஆயத்தமாவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ஹேச் மற்றும் எஸ்யுவிக்களுக்கு கேரளா மிக சிறந்த சந்தை ஆகும். எங்களின் டியாகோ, பன்ச் மற்றும் நெக்சான் போன்ற மாடல்கள் கேரளாவில் அதிக விற்பனையாகும் டாப் 10 மாடல்களில் இடம்பிடித்துள்ளன," என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை, விளம்பரம் மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவி துணை தலைவர் ராஜன் அம்பா தெரிவித்தார்.

Tags:    

Similar News