கார்

விற்பனையில் புது மைல்கல் எட்டிய ஸ்கோடா கார்

Published On 2022-06-23 04:58 GMT   |   Update On 2022-06-23 04:58 GMT
  • ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா மாடல் இந்திய சந்தையில் புது மைல்கல் எட்டி இருக்கிறது.
  • இந்த கார் CKD முறையில் அதிகம் விற்பனையாகும் மாடல் ஆகும்.

ஸ்கோடா ஆக்டேவியா மாடல் இந்திய சந்தையில் 2001 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல் இந்தியாவில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல் எட்டியுள்ளது. இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 111 யூனிட்களை வினியோகம் செய்து இருக்கிறது.

"ஆக்டேவியா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அசத்தலான டிசைன், தொழில்நுட்பம், சவுகரியம் மற்றும் சிறப்பான டைனமிக்ஸ் கொண்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் இந்த கார் தனக்கான பிரிவை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. எங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் நண்பர்கள், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்," என ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்டு இயக்குனர் ஜாக் ஹாலிஸ் தெரிவித்தார்.


நான்காம் தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா மாடல் 2021 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 26 லட்சத்து 85 ஆயிரம் என துவங்குகிறது. இந்த மாடல் 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் 2 லிட்டர், 4 சிலிண்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 187 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

ஸ்கோடா ஆக்டேவியா மாடல் 600 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த காரின் பின்புற இருக்கையை மடித்து வைக்கும் போது பூட் ஸ்பேஸ் 1555 லிட்டர்களாக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News