கார்

வேற லெவல் அப்டேட்கள்... முற்றிலும் புதிய வென்யூ மாடல் அறிமுகம்... என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Published On 2025-10-26 15:06 IST   |   Update On 2025-10-26 15:06:00 IST
  • முற்றிலும் புதிய வென்யூ மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன.
  • புதிய வென்யூ அதே கப்பா 1.2 MPi பெட்ரோல், 1.0 TGDi பெட்ரோல் மற்றும் 1.5 U2 CRDi டீசல் மோட்டார்களுடன் கிடைக்கிறது.

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய வென்யூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. காஸ்மெடிக் மாற்றங்களைத் தவிர்த்து, புதிய வென்யூ பரிமாண ரீதியாக அளவில் பெரியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் வென்யூ மாடலை விட புதிய வென்யூ 48 மிமீ உயரமும், 30 மிமீ அகலமும் கொண்டுள்ளது.

முற்றிலும் புதிய வென்யூ மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. புதிய வென்யூ மாடலை வாடிக்கையளர்கள் ரூ. 25,000 முன்பணம் செலுத்தி, அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் டீலர்ஷிப் அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

மாற்றங்களை பொருத்தவரை புதிய வென்யூ வெளிப்புறத்தில் குவாட்-பீம் எல்இடி ஹெட்லைட்கள், இரட்டை ஹார்ன் டிஆர்எல்-கள், ஹாரிசன் எல்இடி டெயில் லைட்டுகள், டார்க் குரோம் ரேடியேட்டர் கிரில், பிரிட்ஜ்-டைப் ரூஃப் ரெயில்கள், சி-பில்லர் மற்றும் 'வென்யூ' லோகோ ஆகியவை உள்ளன. உட்புறத்தில், இரட்டை 12.3-இன்ச் கிளஸ்டர், பின்புற ஜன்னல் சன்ஷேடுகள், டூயல்-டோன் லெதர் இருக்கைகள், சரவுண்ட் லைட்கள், டி-கட் ஸ்டீயரிங், பின்புற ஏசி வென்ட்கள் உள்ளன.

புதிய வென்யூ அதே கப்பா 1.2 MPi பெட்ரோல், 1.0 TGDi பெட்ரோல் மற்றும் 1.5 U2 CRDi டீசல் மோட்டார்களுடன் கிடைக்கிறது. இவை 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் அல்லது டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

இந்த யூனிட்கள் முறையே 118bhp பவர் / 172Nm டார்க் (1.0 TGDi), 82bhp பவர் /113Nm டார்க் (1.2 MPi), மற்றும் 114bhp பவர் / 250Nm டார்க் (1.5 U2 CRDi) வெளிப்படுத்தும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News