கார்

இந்தியாவில் 3 கோடி கார்களை விற்பனை செய்த முதல் நிறுவனம் - மாருதி சுசுகி சாதனை

Published On 2025-11-06 20:04 IST   |   Update On 2025-11-06 20:04:00 IST
  • 1983 ஆம் ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் கார் விற்பனையை தொடங்கியது.
  • இந்த மைல்கல்லை அடைய மாருதி சுசுகி நிறுவனத்திற்கு 42 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்த முதல் நிறுவனம் என்ற சாதனையை மாருதி சுசுகி படைத்துள்ளது.

1983 ஆம் ஆண்டு இந்தியாவில் கார் விற்பனையை தொடங்கிய மாருதி சுசுகி இந்த மைல்கல்லை அடைய 42 ஆண்டுகள் ஆகியுள்ளது.

விற்பனையான 3 கோடி கார்களில் அதிகபட்சமாக Alto மாடல் 47 லட்சம், Wagon R மாடல் 34 லட்சம், Swift மாடல் 32 லட்சம் விற்றுள்ளதாக மாருதி சுசுகி கூறியுள்ளது.

இதுகுறித்து பேசிய மாருதியின் தலைமை நிர்வாக அதிகாரி, "இந்தியாவில் 1,000 பேருக்கு 33 கார்கள் மட்டுமே உள்ளது. ஆகையால் எங்களுக்கு இன்னும் அதிகமான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளது" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News