கார்

முன்பதிவில் அசத்தும் மாருதி சுசுகி Fronx - வெளியீடு எப்போ தெரியுமா?

Published On 2023-02-02 08:53 GMT   |   Update On 2023-02-02 08:53 GMT
  • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய Fronx மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
  • மாருதி சுசுகி Fronx இருவித என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

மாருதி சுசுகி நிறுவனம் புதிய பலேனோ மாடலை சார்ந்து உருவாக்கப்பட்ட Fronx மாடலை ஜனவரி 12 ஆம் தேதி நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. மேலும் இந்த காம்பேக்ட் கிராஸ்ஒவர் மாடலுக்கான முன்பதிவும் அதே நாளில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதிய மாருதி சுசுகி Fronx மாடலை வாங்க அதற்குள் 5 ஆயிரத்து 500 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்திய சந்தையில் புதிய Fronx மாடல் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. Fronx மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் நெக்சா டீலர்ஷிப்களின் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இது மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது எஸ்யுவி / கிராஸ்ஒவர் மாடல் ஆகும். இதுதவிர பிரெஸ்ஸா மாடலை மாருதி சுசுகி தனது அரினா டீலர்ஷிப்களின் மூலம் விற்பனை செய்து வருகிறது.

மாருதி சுசுகி Fronx மாடலில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் பூஸ்டர்ஜெட் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களுடன் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இவை முறையே 100 ஹெச்பி பவர், 147.6 நியூட்டன் மீட்டர் மற்றும் 90 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.

டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், NA பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் மாருதி சுசுகி Fronx மாடல்- சிக்மா, டெல்டா, டெல்டா பிளஸ், சீட்டா மற்றும் ஆல்ஃபா என ஐந்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி Fronx மாடலின் விலை ரூ. 8 லட்சம் பட்ஜெட்டில் துவங்கி அதிகபட்சம் ரூ. 11 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஸ்ஸா தவிர மாருதி சுசுகி Fronx மாடல் ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், டாடா நெக்சான், மஹிந்திரா XUV300, நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News