கார்

இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி சுசுகி

Published On 2023-01-31 11:07 GMT   |   Update On 2023-01-31 11:07 GMT
  • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் மொத்தத்தில் 17 கார்களை விற்பனை செய்து வருகிறது.
  • இதுதவிர Fronx மற்றும் ஜிம்னி மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அங்கமான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் இந்திய சந்தையில் 25 மில்லியன் யூனிட்கள் எனும் விற்பனை இலக்கை எட்டியுள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி இந்த மைல்கல் எட்டியதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. 1983 வாக்கில் மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் கார், மாருதி 800 மாடலை அறிமுகம் செய்தது.

இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் 25 ஆவது மில்லியன் யூனிட் ஆக கிராண்ட் விட்டாரா மாடல் அமைந்துள்ளது. மாருதி 800 மாடல் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனம் தற்போது 17 வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

இவற்றில் பெட்ரோல் மற்றும் CNG மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனை உள்நாட்டிலேயே நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் மாருதி சுசுகி நிறுவனம் பத்து லட்சம் CNG கார்களை விற்று அசத்தியது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் மாருதி சுசுகி நிறுவனம் Fronx மற்றும் ஜிம்னி மாடல்களை அறிமுகம் செய்தது. இரு கார்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இரு மாடல்களின் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News