கார்

மாருதி கிராண்ட் விட்டாரா CNG இந்தியாவில் அறிமுகம்

Published On 2023-01-06 09:53 GMT   |   Update On 2023-01-06 09:53 GMT
  • மாருதி சுசுகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா CNG மாடல் லிட்டருக்கு 26.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
  • புதிய கிராண்ட் விட்டாரா மாடலில் ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

மாருதி சுசுகி நிறுவனம் புதிய கிராண்ட் விட்டாரா CNG கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கிராண்ட் விட்டாரா CNG மாடல் விலை ரூ. 12 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த கார் டெல்டா மற்றும் சீட்டா என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் சீட்டா மாடல் விலை ரூ. 14 லட்சத்து 84 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா CNG மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 136 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. CNG மோடில் இது 87 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த காரின் CNG வெர்ஷன் லிட்டருக்கு 26.6 கிலோமீட்டர் வரை செல்லும்.

அம்சங்களை பொருத்தவரை மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா CNG மாடலில் ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, சுசுகி கனெக்ட் டெலிமேடிக்ஸ், ஆறு ஏர்பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய CNG வேரியண்ட் மாதாந்திர சந்தா முறையிலும் கிடைக்கிறது. இதற்கான கட்டணம் மாதம் ரூ. 30 ஆயிரத்து 723 என துவங்குகிறது.

Tags:    

Similar News