கார்
null

முன்பதிவில் நல்ல வரவேற்பை பெறும் மாருதி Fronx - விரைவில் வெளியீடு!

Update: 2023-03-24 14:04 GMT
  • மாருதி சுசுகி நிறுவனத்தின் Fronx மாடல் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
  • புதிய Fronx மாடல் நாடு முழுக்க விற்பனை மையங்களுக்கு வரத் துவங்கி உள்ளன.

மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய Fronx மாடலை இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. பின் இந்த மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய மாருதி Fronx மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், மாருதி Fronx மாடல் இதுவரை சுமார் 15 ஆயிரத்து 500-க்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருப்பதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. விற்பனையகம் வரத் துவங்கி இருக்கும் நிலையில், மாருதி Fronx மாடலின் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

 

2023 மாருதி Fronx மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை முறையே 99 ஹெச்பி பவர், 147 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட், AMT யூனிட் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய மாருதி Fronx மாடல் சிக்மா, டெல்டா, டெல்டா பிளஸ், சீட்டா மற்றும் ஆல்ஃபா என ஐந்து விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் ஆர்க்டிக் வைட், கிராண்டியுர் கிரே, ஏர்தன் பிரவுன், ஒபுலண்ட் ரெட், ஸ்பிலெண்டிட் சில்வர், ஏதர்ன் பிரவுன் - புளூயிஷ் பிளாக் ரூஃப், ஒபுலண்ட் ரெட் - புளூயிஷ் பிளாக் ரூஃப் மற்றும் ஸ்பிலெண்டிட் சில்வர் - புளூயிஷ் பிளாக் ரூஃப் என எட்டுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News