கார்

தார் மாடல் விலையை திடீரென மாற்றிய மஹிந்திரா

Update: 2022-09-24 09:05 GMT
  • மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது தார் மாடல் விலையை மாற்றி அமைத்து இருக்கிறது.
  • காரின் வேரியண்டுக்கு ஏற்ப விலை உயர்வு மற்றும் குறைக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது தார் எஸ்யுவி மாடல் விலையை மாற்றி இருக்கிறது. தார் எஸ்யுவி வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு மற்றும் குறைக்கப்பட்டு உள்ளது. மஹிந்திரா தார் AX வேரியண்ட் புதிய விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

எனினும், மஹிந்திரா தார் பெட்ரோல் AT, கன்வெர்டிபில் ஹார்டு டாப் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 20 ஆயிரத்து 678 மற்றும் ரூ. 21 ஆயிரத்து 271 குறைக்கப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா தார் பெட்ரோல் MT மாடல் விலை ரூ. 5 ஆயிரத்து 711 உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா தார் டீசல் வேரியண்ட் விலைகளும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. டீசல் MT ஹார்டு டாப் வேரியண்ட் மற்றும் கன்வெர்டிபில் விலை முறையே ரூ. 28 ஆயிரத்து 278 மற்றும் ரூ. 28 ஆயிரத்து 096 உயர்த்தப்பட்டு உள்ளது. இதே போன்று மஹிந்திரா தார் டீசல் AT வேரியண்ட் கன்வெர்டிபில் மற்றும் ஹார்டு டாப் வேரியண்ட் விலை முறையே ரூ. 52 ஆயிரத்து 780 மற்றும் ரூ. 53 ஆயிரத்து 411 உயர்த்தப்பட்டு உள்ளது.

முன்னதாக இதே மாதத்தில் மஹிந்திரா தார் நிற ஆப்ஷன்கள் மாற்றப்பட்டன. இத்துடன் மஹிந்திரா XUV700 விலைகளும் மாற்றப்பட்டன. அந்த வரிசையில் தான் தற்போது தார் மாடல் விலை மாற்றப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News