கார்

புது எலெக்ட்ரிக் கார்களின் டீசர் வெளியிட்ட மஹிந்திரா

Published On 2022-06-14 08:02 GMT   |   Update On 2022-06-14 08:02 GMT
  • மஹிந்திரா நிறுவனம் விரைவில் புது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • புது எலெக்ட்ரிக் கார்கள் மஹிந்திரா அட்வான்ஸ்டு டிசைன் ஸ்டூடியோவில் டிசைன் செய்யப்பட்டுள்ளன.

மஹிந்திரா நிறுவனம் "Born Electric" பெயரில் கான்செப்ட் எஸ்.யு.வி. மாடல்கள் டீசரை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் புது டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் டிசைன் பிரிவை சேர்ந்த மூத்த அலுவலர் பிரதாப் போஸ், தனது சமூக வலைதள பக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் புதிய மஹிந்திரா எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் டீசரை வெளியிட்டு உள்ளார். இந்த மாடல் மஹிந்திரா அட்வான்ஸ்டு டிசைன் ஸ்டூடியோ சார்பில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.


புது எலெக்ட்ரிக் கார் சர்வதேச சந்தைக்கான எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என தெரிகிறது. டீசர் வீடியோவின் படி புதிய எஸ்.யு.வி. மாடலை, மஹிந்திரா ஃபார்முலா இ பந்தயத்தில் கற்ற அனுபவங்களை வைத்து உருவாக்க இருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய டீசர்களில் இந்த காரின் உள்புறம் ஃபைட்டர் ஜெட் காக்பிட் போன்ற இண்டீரியர் கொண்டிருக்கும் என தெரியவந்தது.

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் ஆகஸ்ட் 15 ஆம் தேதி லண்டனில் அறிமுகம் செய்யப்படலாம். இது மட்டுமின்றி மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

Tags:    

Similar News