கார்

முழுசா ரூ. 2.5 லட்சம் தள்ளுபடி... முரட்டு ஆஃபர் அறிவித்த மஹிந்திரா

Published On 2025-07-14 11:34 IST   |   Update On 2025-07-14 11:34:00 IST
  • மஹிந்திரா நிறுவனம் கிளாசிக் S மாடலுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.
  • AX3 இன் மீதமுள்ள மாடல்களுக்கு ரூ. 30,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போதுள்ள தயாரிப்பு மாடல்களின் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க மஹிந்திரா முயற்சி செய்து வருகிறது. இதற்காக வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா நிறுவனம் பல புதிய கான்செப்ட் மாடல்களை வெளியிட உள்ளது.

மஹிந்திரா தற்போது ஸ்கார்பியோ N, XUV700 மற்றும் பல மாடல்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இவை ஜூலை மாத இறுதி வரை வழங்கப்படும். இந்த சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை ஒவ்வொரு நகரம் மற்றும் டீலர்ஷிப்களைப் பொறுத்து மாறுபடலாம்.

மஹிந்திரா ஸ்கார்பியோ:

மஹிந்திரா நிறுவனம் கிளாசிக் S மாடலுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. அதே நேரத்தில் S11 வேரியண்டிற்கு ரூ.50,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிளாக் எடிஷன் ஸ்கார்பியோ N Z8 மற்றும் Z8 L மாடலுக்கு ரூ. 40,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மலிவு விலை வேரியண்ட்களைத் தேடும் வாடிக்கையாளர்கள் Z4 மற்றும் Z6 வேரியண்ட்களில் ரூ. 30,000 வரை தள்ளுபடி பெற முடியும்.

மஹிந்திரா XUV700:



மஹிந்திரா XUV700 AX5 மற்றும் AX5 S வேரியண்ட்களுக்கு ஜூலை 2025 மாதத்தில் ரூ. 30,000 வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும், AX3 இன் மீதமுள்ள மாடல்களுக்கு ரூ. 30,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மஹிந்திரா XUV400:

மஹிந்திரா நிறுவனம் XUV400 மாடலுக்கு அதிக தள்ளுபடியை வழங்குகிறது. ஜூலை 2025 இல் மஹிந்திரா XUV400 EL Pro வேரியண்டிற்கு வாடிக்கையாளர்கள் ரூ. 2.5 லட்சம் வரையிலான சலுகைகளைப் பெறலாம்.

மஹிந்திரா XUV 3XO:

மஹிந்திரா XUV 3XO AX5 பெட்ரோல் மேனுவல் மற்றும் AX 5L வேரியண்ட்களுக்கு ரூ. 50,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News