கார்

இந்தியாவில் பொலிரோ சீரிஸ் விலையை மாற்றிய மஹிந்திரா

Published On 2022-09-20 09:27 GMT   |   Update On 2022-09-20 09:27 GMT
  • மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்கள் விலையை மாற்றி இருக்கிறது.
  • இரு கார்களிலும் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களின் விலை மட்டும் மாற்றப்பட்டு உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வின் படி மஹிந்திரா பொலிரோ B4 மற்றும் B6 (O) வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 20 ஆயிரத்து 701 மற்றும் ரூ. 22 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதே போன்று பொலிரோ நியோ N4, N10 மற்றும் N10(O) மாடல்கள் விலை முறையே ரூ. 18 ஆயிரத்து 800, ரூ. 21 ஆயரத்து 007 மற்றும் ரூ. 20 ஆயிரத்து 501 உயர்த்தப்பட்டு இருக்கிறது.

விலை உயர்வு தவிர இரு மாடல்களின் அம்சங்களிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. தோற்றத்தில் இரு கார்களிலும் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய லோகோ மட்டும் இடம்பெற்று உள்ளது. காரின் ஸ்டீரிங் வீல், முன்புற கிரில், வீல் ஹப் கேப்கள் மற்றும் டெயில் கேட் உள்ளிட்ட இடங்களில் லோகோ இடம்பெற்று இருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா பொலிரோ மாடல் விலை ரூ. 9 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. பொலிரோ நியோ மாடல் விலை ரூ. 9 லட்சத்து 48 ஆயிரம் என துவங்குகிறது. மஹிந்திரா பொலிரோ நியோ டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா பொலிரோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 75 ஹெச்பி பவர், 210 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்பி பவர், 240 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News