கார்

பெரிய பேட்டரி, அதிக ரேஞ்ச் - மஹிந்திரா கொடுத்த சூப்பர் அப்டேட்

Published On 2025-07-06 12:53 IST   |   Update On 2025-07-06 12:53:00 IST
  • எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கள் அவற்றின் மையத்தில் செயல்திறன் மற்றும் வசதி இரண்டையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • வேகமான DC சார்ஜர்களைப் பயன்படுத்தும் போது வெறும் 20 நிமிடங்களில் 20 முதல் 80 சதவீதம் பேட்டரி ரீசார்ஜ் செய்ய உதவுகிறது.

மஹிந்திரா நிறுவனம் தனது BE 6 மற்றும் XEV 9e மாடல்களில் 79 kWh பேட்டரி பேக்கை அறிமுகம் செய்தது. இரு எலெக்ட்ரிக் வாகனங்களின் Pack 2 டிரிமில் இந்த பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, இரண்டு எஸ்யூவி-களும் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு நிறுவனம் கவனித்த நுகர்வோர் தேவை முறையில் வேரூன்றியதாகத் தெரிகிறது.

சமீபத்தில் மஹந்திரா வெளியிட்ட தகவல்களில் இந்த கார்களுக்கான மொத்த முன்பதிவுகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை விலை உயர்ந்த Pack 3 வேரியண்ட்களுக்கானவை என்று நிறுவனம் அறிவித்தது.

79 kWh பேட்டரி பேக் கொண்ட மஹிந்திரா BE 6 Pack 2 மாடலின் விலை ரூ.23.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இதன் மூலம் இந்த விருப்பத்திற்கான விலை ரூ.26.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து குறைகிறது. இதேபோல், XEV 9e-க்கு, 79 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் தற்போது ரூ. 24.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. 79 kWh பேட்டரி பேக் கொண்ட இந்த வேரியண்ட் 500 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குவதை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் 59 kWh வெர்ஷன் 400 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்குகிறது.

Pack 2-வில் உள்ள இரண்டு மாடல்களும் டால்பி அட்மாஸ் கொண்ட ஹர்மன் கார்டன் 16-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ஃபுல் கிளாஸ் ரூஃப் மற்றும் லெவல் 2 ADAS திறன் போன்ற அம்சங்களுடன் வருகின்றன. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கள் அவற்றின் மையத்தில் செயல்திறன் மற்றும் வசதி இரண்டையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

புதிய 79 kWh வேரியண்டில் 210 kW சக்தியும், 59 kWh பதிப்பில் 170 kW சக்தியும், பூஸ்ட் மோட் உட்பட பல டிரைவிங் மோட்களுடன் வருகின்றன. இவை ஒரு அற்புதமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகின்றன. மேலும், BE 6 மற்றும் XEV 9e Pack 2 மாடல்கள் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. வேகமான DC சார்ஜர்களைப் பயன்படுத்தும் போது வெறும் 20 நிமிடங்களில் 20 முதல் 80 சதவீதம் பேட்டரி ரீசார்ஜ் செய்ய உதவுகிறது.

Tags:    

Similar News