கார்

ஹூண்டாய் கார்களுக்கு இவ்வளவு சலுகைகளா? மிஸ் பண்ணிடாதீங்க!

Update: 2022-08-06 09:55 GMT
  • ஹூண்டாய் நிறுவன கார் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கி வருகின்றனர்.
  • சிறப்பு சலுகை மற்றும் பலன்கள் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு மட்டும் பொருந்தும்.

இந்தியாவில் உள்ள ஹூண்டாய் கார் விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து வழங்கி வருகின்றனர். இவற்றை வாடிக்கையாளர்கள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் பெற்றுக் கொள்ளலாம்.

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களின் டர்போ பெட்ரோல் வேரியண்ட் வாங்குவோருக்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி என மொத்தம் ரூ. 48 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும்.


இதே காரின் 1.2 லிட்டர் வேரியண்ட் (ஆரா மட்டும்) ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹூண்டாய் ஆரா மற்றும் கிராண்ட் i10 நியோஸ் மாடலின் CNG வேரியண்ட் வாங்கும் போது ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் i20 காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் வழங்கப்படும். ஹூண்டாய் கிரெட்டா, வென்யூ, வெர்னா, அல்கசார் மற்றும் i20 N லைன் போன்ற மாடல்களுக்கு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. 

Tags:    

Similar News