கார்

அசத்தல் அப்டேட்களுடன் ஹோண்டா எலிவேட் புது வேரியண்ட் அறிமுகம்... என்ன ஸ்பெஷல்..?

Published On 2025-11-04 15:20 IST   |   Update On 2025-11-04 15:20:00 IST
  • எலிவேட் ADV மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • லேன்-கீப் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல வசதிகள் உள்ளன.

ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் எலிவேட் மாடலின் புதிய டாப் எண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. எலிவேட் ADV என்று அழைக்கப்படும் புதிய வேரியண்ட் ஸ்போர்ட் தோற்றத்தையும், தனித்துவமான காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டிருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய எலிவேட் மாடலின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் விலை ரூ. 15.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது. இதன் CVT டூயல்-டோன் மாடன் விலை ரூ. 16.66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ADV மாடல் கிளாஸ் பிளாக் ஆல்பா-போல்ட் பிளஸ் முன்பக்க கிரில், ஆரஞ்சு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட ஹூட் டெக்கல், ORVMகள் மற்றும் ஆரஞ்சு சிறப்பம்சங்களுடன் பிளாக் அலாய் வீல்கள் என பிரத்யேக ஸ்டைலிங் அப்டேட்களுடன் வருகிறது. இத்துடன் ADV பேட்ஜ்கள், ஆரஞ்சு ஃபாக் லைட் மற்றும் ஆரஞ்சு நிற அக்சென்ட்களுடன் கூடிய பின்புற பம்பர் ஸ்கிட் பிளேட் வழங்கப்படுகின்றன.

எலிவேட் ADV மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு CVT ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் பேடில் ஷிஃப்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.



பாதுகாப்பு அம்சங்களில், எலிவேட் ADV மாடலில் ஹோண்டா சென்சிங் ADAS பொருத்தப்பட்டுள்ளது. இதில் லேன்-கீப் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல வசதிகள் உள்ளன. நிலையான பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், லேன் வாட்ச் கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ISOFIX மவுண்ட் ஆகியவை அடங்கும்.

எலிவேட் ADV மாடல், மீடியோராய்டு கிரே மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் மெட்டாலிக் நிறங்களில், சிங்கில் டோன் மற்றும் டூயல்-டோன் நிறங்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News