கார்

எலெக்ட்ரிக் மஹிந்திரா XUV400 இந்திய சோதனை துவக்கம்!

Update: 2022-06-17 10:14 GMT
  • மஹிந்திரா நிறுவனம் XUV400 எலெக்ட்ரிக் மாடலை உருவாக்கி வருகிறது.
  • புதிய XUV400 EV மாடல் இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

மஹிந்திரா ஆட்டோ நிறுவனம் தனது முதல் முழு எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை சோதனை செய்யும் பணிகளை துவங்கி உள்ளது. இந்த மாடல் XUV400 என அழைக்கப்பட இருக்கிறது. சமீபத்தில் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்ட மஹிந்திரா XUV400 மாடல் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம்.


புதிய மஹிந்திரா XUV400 மாடல் XUV300 சப்-காம்பேக்ட் மாடல் உருவாக்கப்பட்ட பிளாட்பார்மிலேயே உருவாகும் என தெரிகிறது. இந்த மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் XUV300 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடல் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் ஆல்-எலெக்ட்ரிக் மாடல் இல்லை. முன்னதாக மஹிந்திரா நிறுவனம் e20 மற்றும் e20 பிளஸ் எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல்களை வெளியிட்டு இறுக்கிறது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா நிறுவனத்தின் 'Born Electric' அறிமுக நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் மஹிந்திரா நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இவற்றில் புதிய மஹிந்திரா XUV400 மாடல் இடம்பெற்று இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Photo Courtesy: B Vinubalan

Tags:    

Similar News