கார்

பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய M சீரிஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்

Update: 2022-06-25 09:30 GMT
  • பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது M பிரிவின் 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் புது காரை அறிமுகம் செய்தது.
  • இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும்.

பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் புதிய M340i எக்ஸ்டிரைவ் 50 ஜாரெ எம் எடிஷன் கார் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. காரின் விலை ரூ. 68 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் M பிரிவு 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் சென்னையில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

புதிய பி.எம்.டபிள்யூ. M340i எக்ஸ்டிரைவ் 50 ஜாரெ எம் எடிஷன் மாடலில் 6 சிலிண்டர்கள் கொண்ட ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இறுக்கிறது. இந்த என்ஜின் 387 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் எக்ஸ்டிரைவ் சிஸ்டம் ஸ்டாரண்டு அம்சமாக வழங்கப்படுகிறது.


இந்த கார் டிராவிட் கிரே மற்றும் டான்சானைட் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதில் 50 ஜாரெ எம் எடிஷன் எலிமண்ட்களான ஹை-கிளாஸ் பிளாக் கிட்னி கிரில், ஜெட் பிளாக் விண்டோ சரவுண்ட், மிரர் கேப்கள் மற்றும் 19 இன்ச் M லைட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. காரின் உள்புறம் சென்சடெக்/அல்காண்ட்ரா ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஆந்த்ரசைட் பி.எம்.டபிள்யூ. ரூஃப் லைனர், M லெதர் ஸ்டீரிங் வீல், M சீட் பெல்ட் மற்றும் பியானோ பிளாக் நிற ட்ரிம் ஸ்ட்ரிப்கள் வழங்கப்படுகிறது.

புதிய M சீரிஸ் காரை பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஆப்ஷனல் 50 ஆண்டுகள் M பேக்கேஜ்கள் - மோட்டார்ஸ்போர்ட் பேக் மற்றும் கார்பன் ஃபைபர் பேக் வடிவில் வழங்குகிறது. இவை காரின் ஸ்போர்ட் தோற்றத்தை மேலும் மேம்படுத்தி காண்பிக்கிறது. 

Tags:    

Similar News