கார்

முழுசா மாற்றப்பட்ட 2024 கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் - வெளியீடு எப்போ தெரியுமா?

Published On 2023-11-30 13:22 GMT   |   Update On 2023-11-30 13:22 GMT
  • மூன்று ஆண்டுகளாக மிகப்பெரிய அப்கிரேடுகள் இன்றி விற்பனை.
  • ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் மாற்றப்பட்டு இருக்கிறது.

கியா இந்தியா நிறுவனம் தனது சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை டிசம்பர் 14-ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்கிறது. இந்த கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சொனெட் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் தற்போது மூன்று ஆண்டுகளாக மிகப்பெரிய அப்கிரேடுகள் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அறிமுகமானதும் இந்த கார் சமீபத்தில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா நெக்சான், ஹூண்டாய் வென்யூ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். வெளிப்புறம் மற்றும் உள்புற மாற்றங்கள் தவிர 2024 கியா சொனெட் மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என தெரிகிறது.

 

புதிய கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் மாற்றப்பட்டு புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் மேம்பட்ட பம்ப்பர் வழங்கப்படுகிறது. மேலும் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள், ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. 2024 சொனெட் மாடல் முற்றிலும் புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News