கார்

2023 கியா கரென்ஸ் இந்திய விலை விவரங்கள் அறிவிப்பு

Update: 2023-03-16 09:43 GMT
  • கியா நிறுவனத்தின் புதிய கரென்ஸ் மாடல் பிஎஸ்6 2 ரக என்ஜின்கள், iMT கியர்பாக்ஸ் கொண்டுள்ளன.
  • புதிய மாடலில் 12.5 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

கியா இந்தியா நிறுவனம் 2023 கியா கரென்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கியா கரென்ஸ் மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய என்ஜின்கள் பிஎஸ்6 2 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய அப்டேட்களுக்கு ஏற்ப கரென்ஸ் மாடல் விலை ரூ. 50 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. புதிய கியா கரென்ஸ் மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் iMT மற்றும் 7 ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது.

டீசல் என்ஜினுடன் iMT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை கியா கரென்ஸ் மாடலில் 12.5 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இத்துடன் அலெக்சா கனெக்டிவிட்டி, கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News