கார்
ஹோண்டா கார்

கார் மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவித்த ஹோண்டா கார்ஸ்

Published On 2022-06-02 12:45 GMT   |   Update On 2022-06-06 09:51 GMT
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை இம்மமாதம் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.


ஜூன் மாதத்தில் கார் மாடல்கள் விற்பனையை அதிகப்படுத்த ஹோண்டா கார்ஸ் நிறுவனம் அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. சிறப்பு சலுகைகள் ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் பெரும்பாலான மாடல்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது சில கார் மாடல்களுக்கான சலுகை பலன்கள் குறைக்கப்பட்டு உள்ளன. 

எனினும், சில மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறப்பு சலுகைகள், தள்ளுபடி உள்ளிட்டவை வேரியண்ட், கிரேடு மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும். இவை ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கின்றன.

ஹோண்டா சிட்டி (5th Gen) - இந்தியாவில் ஹோண்டா சிட்டி மாடலுக்கு ரூ. 27 ஆயிரத்து 396 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 5 ஆயிரம் கேஷ் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரத்து 396 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள், கார் எக்சேன்ஜ் சலுகையில் ரூ. 5 ஆயிரம், லாயல்டி போனஸ் ரூ. 7 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 



ஹோண்டா WR-V - மே மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த மாதம் ஹோண்டா WR-V மாடலுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி கார் எக்சேன்ஜ் சலுகையில் ரூ. 10 ஆயிரம், லாயல்டி போனஸ் ரூ. 5 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ஹோண்டா கார் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 7 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

ஹோண்டா ஜாஸ் - இந்தியாவில் புதிய ஹோண்டா ஜாஸ் மாடலுக்கு ரூ. 33 ஆயிரத்து 158 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 5 ஆயிரம் கேஷ் தள்ளுபடி அல்லது ரூ. 5 ஆயிரத்து 947 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் கார் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் ரூ. 7 ஆயிரம், லாயல்டி போனஸ் ரூ. 5 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.



ஹோண்டா சிட்டி (4th Gen) - 4th Gen ஹோண்டா சிட்டி மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் ஹோண்டா கார் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. 

ஹோண்டா அமேஸ்- ஹோண்டா அமேஸ் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ. 3 ஆயிரம் காரப்பரேட் தள்ளுபடி உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News