கார்
லம்போர்கினி உருஸ்

பிரபல எஸ்.யு.வி. எலெக்ட்ரிக் வேரியண்டை அறிமுகம் செய்யும் லம்போர்கினி

Published On 2022-05-16 14:35 IST   |   Update On 2022-05-16 14:35:00 IST
லம்போர்கினி நிறுவனத்தின் பிரபல எஸ்.யு.வி. மாடல் எலெக்ட்ரிக் வடிவம் கொண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


லம்போர்கினி நிறுவனத்தின் அதிக பிரபலமான எஸ்.யு.வி. மாடல் உருஸ் விளங்குகிறது. லம்போர்கினி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகி வரும் உருஸ் மாடலை, விரைவில் முழுமையான எலெக்ட்ரிக் மாடல் வெர்ஷனில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

லம்போர்கினி நிறுவனத்தின் டிசைன் பிரிவு தலைவர் மிட்ஜா பரோகெர்ட் ஆல்-எலெக்ட்ரிக் லம்போர்கினி உருஸ் எஸ்.யு.வி. வெளியீடு பற்றிய தகவலை வெளியிட்டு இருக்கிறார். எனினும், இதற்கு இன்னும் சில காலம் ஆகும் என தெரிகிறது.



“இப்போதா அல்லது தாமதம் ஆகுமோ என தெரியாது, உருஸ் மாடல் நிச்சயம் எலெக்ட்ரிக் வடிவம் பெறும்... உண்மையை சொல்லப் போனால், உலகில் இந்த டிரெண்ட் நிச்சயம் சூடுப் பிடித்துக் கொண்டு தான் வருகிறது. இப்போதே உருஸ் எலெக்ட்ரிக் வேரியண்ட் உருவாகும் என்று நான் கூற மாட்டேன், ஆனால் இதுபோன்ற கார்களை எலெக்ட்ரிக் வடிவில் மாற்றுவது அர்த்தமுள்ள காரியமாக இருக்கும்,” என பரோகெர்ட் தெரிவித்தார். 

2027 வாக்கில் லம்போர்கினி நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ர்க் கார் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக லம்போர்கினி நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. கடந்த ஆண்டு தனது கார் மாடல்களை எலெக்ட்ரிக் வடிவில் மாற்றவும், எலெக்ட்ரிக் வாகன துறையில் கவனம் கால் பதிக்கவும் லம்போர்கினி நிறுவனம் சுமார் 1.5 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்வதாக தெரிவித்தது.

Similar News