கார்
டாடா அவின்யா EV கான்செப்ட்

டாடா அவின்யா EV கான்செப்ட் இந்தியாவில் அறிமுகம்

Published On 2022-04-29 10:12 GMT   |   Update On 2022-04-29 10:12 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அவின்யா EV கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய அவின்யா எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 'Born Electric' பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய 'Born Electric' பிளாட்பார்மின் கீழ் வெவ்வேறு EV பாடி ஸ்டைல்களில் புது மாடல்கள் உருவாக்கப்படுகின்றன. 

புது கான்செப்ட்களின் முதல் ப்ரோடக்‌ஷன் மாடல் 2025 வாக்கில் சாலைகளில் வலம்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அவின்யா கான்செப்ட் மாடலுடன் TPEML-இன் புதிய பிராண்டு லோகோவுடன் வருகிறது. காரின் முன்புறம் மற்றும் பின்புறங்களில் எல்.இ.டி. பார் இடம்பெற்று இருக்கிறது. இதன் நடுவே T எனும் வார்த்தை தெரிகிறது.



சமஸ்கிருத மொழியில் அவின்யா என்ற வார்த்தைக்கு புதுமை என அர்த்தமாகும். இந்த கான்செப்ட் மாலில் பல்வேறு முதல் முறை அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. மேலும் இந்த கான்செப்ட் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புது டிசைன் மொழியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

இந்த கான்செப்ட் மாடல் பியூர் EV ஜென் 3 தொழில்நுட்பத்தை சார்ந்து உருவாக்கப்பட இருக்கிறது. இந்த காரை DC பாஸ்ட் சார்ஜர் கொண்டு 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்ல முடியும்.

Tags:    

Similar News