கார்
ஹூண்டாய் ஐயோனிக் 5

இந்தியாவில் ஹூண்டாயின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் - வெளியீடு எப்போ தெரியுமா?

Update: 2022-04-27 09:49 GMT
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது அடுத்த எலெக்ட்ரிக் கார் மாடல் எப்போது வெளியாகும் என அறிவித்து இருக்கிறது.


ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சர்வதேச சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்து வரும் ஐயோனிக் 5EV மாடலை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் புதிய எலெக்ட்ரிக் கார் இங்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

புதிய ஐயோனிக் 5 மாடல் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் ஆகும். முன்னதாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஐயோனிக் 5 மாடலை காட்சிப்படுத்திய போதே, இதன் இந்திய வெளியீட்டை ஹூண்டாய் நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது. அந்த வகையில் தற்போது ஐயோனிக் 5 வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறும் என அறிவித்து விட்டது. இது மட்டுமின்றி 2028 ஆம் ஆண்டிற்குள் இந்திய சந்தையில் ஆறு எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

சர்வதேச சந்தையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் 2WD மற்றும் AWD வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 2WD மாடலில் ரியர் ஆக்சில் மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் 217 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

இதன் AWD மாடலில் உள்ள மோட்டார் 305 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஹூண்டாய் ஐயோனிக் 2WD முழு சார்ஜ் செய்தால் 451 கிலோமீட்டர் வலரை செல்லும். ஐயோனிக் 5 AWD வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 430 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும். 

Tags:    

Similar News