கார்
ஓலா எலெக்ட்ரிக்

ரூ. 10 லட்சம் விலையில் புது எலெக்ட்ரிக் கார் - ஓலா எலெக்ட்ரிக் அதிரடி!

Published On 2022-04-26 09:51 GMT   |   Update On 2022-04-26 09:51 GMT
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாகனங்களில் வழங்க இருக்கும் தானியங்கி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.


ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்து எல்க்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கி இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமின்றி எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புது எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களாக நடைபெற்று வருவதாக ஓலா எலெக்ட்ரிக் சி.இ.ஒ. பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். மேலும் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2024 ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விலை ரூ. 10 லட்சத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஸ்லோகர்த் டேஷ் தெரிவித்து இருக்கிறார். இந்த கார் இந்திய சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அம்சங்களுடன், குறைந்த விலையில் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஓலா எலெக்ட்ரிக் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தானியங்கி தொழில்நுட்பமும் காட்சிப்படுத்தப்பட்டது. இதற்கென மாடிபை செய்யப்பட்ட கொல்ஃப் கார்ட் பயன்படுத்தப்பட்டது. புது தொழில்நுட்பம் கொண்ட கார் அதிகபட்சமாக மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. 

இந்த தானியங்கி வாகனத்தில் இரண்டு LiDAR கேமராக்கள், ஒரு வீடியோ கேமரா, GPS பொருத்தப்பட்டு இருந்தது. இந்த தானியங்கி கார் வழியில் யாரேனும் வந்தால் சாமர்த்தியமாக நின்றதோடு, வளைவுகளில் மிகச் சரியாக தானாகவே திரும்பி சென்றது. கான்செப்ட் என்ற முறையில் இந்த மாடல் அதிக நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறது.
Tags:    

Similar News