கார்
கியா கான்செப்ட் EV9

கியா EV9 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. வெளியீட்டு விவரம்

Published On 2022-04-17 04:45 GMT   |   Update On 2022-04-16 11:42 GMT
கியா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு பற்றி புது தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.


கியா நிறுவனம் சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் இரு முக்கிய டிரெண்டிற்கு ஏற்ற வாகனங்களை வெளியிடுவதில் கவனமாக உள்ளது. அதன்படி எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பெரிய எஸ்.யு.வி. போன்ற மாடல்களை அறிமுகம் செய்ய கியா திட்டமிட்டுள்ளது. 

அதன்படி அமெரிக்க சந்தையில் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் கியா EV9 மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. புதிய EV9 மாடல் மூன்று ரோ எஸ்.யு.வி. கார் ஆகும். இது உலகிற்கான EV மாடல்களில் முக்கியத்துவம் வாய்ந்த மாடலாக இருக்கும். 



கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற LA ஆட்டோ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட EV9 மாடல் சமீபத்தில் நியூ யார்க் சர்வதேச ஆட்டோ விழாவில் அமெரிக்க வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹூண்டாய் மோட்டாக் குழுமத்தின் E-GMP பிளாட்பார்மில் உருவாகி வரும் கியா EV9 மாடல் EV6,  EV7 மற்றும் இதர மாடல்களின் மேல் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. 

கான்செப்ட் வடிவில் கியா EV9 அறிமுகம் செய்யும் போதே இந்த மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் காரை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே போதுமானது என கியா நிறுவனம் தெரிவித்து இருந்தது. புதிய கியா EV9 மாடல் முழு சார்ஜ் செய்தால் குறைந்தபட்சம் 500 கிலோமீட்டர்களுக்கான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம். 

Tags:    

Similar News