கார்
நிசான் மின்சார வாகனம்

நிசான் அறிமுகம் செய்யும் புதிய தொழில்நுட்பம்- இனி மின்சார வாகன விற்பனை உயரப்போகிறது

Published On 2022-04-11 16:21 IST   |   Update On 2022-04-11 16:21:00 IST
இந்த பேட்டரி தொழில்நுட்பம் 2028ம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உலகம் முழுவதும் மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. பெரும் நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் தீவிரமாக இயங்கி வருகின்றன.

தினமும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன், அம்சங்களுடன் மின்சார வாகனங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நிசான் நிறுவனம் புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை மின்சார வாகனங்களுக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

சாலிட் ஸ்டேட் பேட்டரி செல்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேட்டரிகள் வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகளை விடவும் இரண்டு மடங்கு டென்சிட்டியை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் குறைந்த விலையில் இந்த பேட்டரிகளை உற்பத்தி செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பரிசோதனை நிலையில் உள்ள இந்த பேட்டரியை முழுதாக 15 நிமிடத்திற்கு சார்ஜ் செய்துவிடலாம் என்றும், தற்போது உள்ள பேட்டரியை விட எடை குறைவு எனவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த பேட்டரி வழக்கமான பேட்டரிக்களை விட மக்கள் நீண்ட நேரம் பயணம் செய்யலாம் என கூறப்படுகிறது.

இந்த தொழில்நுட்பம் மக்களை மேலும் மின்சார வாகனங்களை நோக்கி செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி தொழில்நுட்பம் 2028ம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News