கார்
பிஎம்டபில்யூ

ஊழியர்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள 5 பிஎம்டபில்யூ கார்களை பரிசளித்த ஐடி நிறுவனம்

Published On 2022-04-11 15:18 IST   |   Update On 2022-04-11 15:18:00 IST
பரிசு பெற்றவர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த கார்கள் பரிசளிக்கப்பட்டுள்ளன.
சென்னையை சேர்ந்த கிஸ்ஃப்ளோ இன்கார்பரேஷன் என்ற சர்வதேச மென்பொருள் சேவை நிறுவனம் தனது 5 ஊழியர்களுக்கு தலா ரூ.1 கோடி மதிப்புள்ள பி.எம்.டபில்யூ கார்களை பரிசளித்துள்ளது.

பிஎம்டபில்யூ 5 சீரிஸ் லக்சரி செடான் கார்கள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிஸ்ப்ளோ நிறுவனத்தின் 10வது ஆண்டு நிறைவையொட்டி இந்த பரிசு சிறந்த வஊழியர்களுக்கு தரப்பட்டுள்ளது. பரிசு பெற்றவர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த கார் பரிசளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம் கூறியதாவது:-

பரிசளிக்கப்பட்ட 5 ஊழியர்களும் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து என்னுடன் இருந்தவர்கள். குறிப்பாக பெருந்தொற்று காலத்தில் நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தியவர்கள். அதிலும் சிலர் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள்.

இந்த நிறுவனத்தில் ஊழியர்களுக்கு அனைத்து வகை வசதிகளும் செய்து தரப்படுகிறது. விடுமுறையை பொறுத்தவரை தனித்தனியாக ஆரோக்கிய விடுப்பு, சாதாரண விடுப்பு என்றெல்லாம் கிடையாது. ஒரே விதமான விடுப்பு தான். அவர்களுக்கு பிடித்தால் எடுத்துகொள்ளலாம். அதேபோல அலுவலகத்திற்கு வர விருப்பமில்லை என்றால் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்துகொள்ளலாம். அதேபோல ஊழியர்களுக்கு அட்டெண்டஸும் பிற நிறுவனங்களை போல கிடையாது. 

எங்கள் ஊழியர்களை நாங்கள் ஊக்குவிக்கும் வகையில் இவற்றை செய்து வருகிறோம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Similar News