கார்
மின்சார ஸ்கூட்டர் சார்ஜி நிலையங்கள்

ஜீன் மாதம் முதல் மின்சார வாகனங்களுக்கு இலவச சார்ஜ்- எங்கே தெரியுமா?

Published On 2022-04-06 10:35 GMT   |   Update On 2022-04-07 06:37 GMT
இந்த திட்டத்தின்படி 40 சார்ஜிங் நிலையங்களை நிறுவி மின்சார கார்கள் மற்றும் பைக்குகளுக்கு இலவச சார்ஜ் வழங்கப்படவுள்ளன.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இருப்பினும் மின்சார வகானங்கள் அவ்வபோது தீப்பிடிப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில் மக்களை மின்சார வாகனங்களை வாங்குவதற்கு ஊக்குவிக்கும் வகையில் ElectiVa என்ற நிறுவனம் ஜூன் 1ம் தேதி முதல் இலவச சார்ஜ் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.

இதன்படி டெல்லி முழுவதும் 40 சார்ஜிங் நிலையங்களை நிறுவி மின்சார கார்கள் மற்றும் பைக்குகளுக்கு இலவச சார்ஜ் வழங்கப்படவுள்ளன.
இந்த இலவச சார்ஜ் சேவை பொது சார்ஜிங் நிலையங்களில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து ElectiVa-ன் நிறுவனர் சுமித் தனுஷ்கா கூறுகையில், அனைத்து கமர்ஷியல் மற்றும் கமர்ஷியல் அல்லாத மின்சார வாகன பயனர்களுக்கும் இந்த இலவச சார்ஜ் வழங்கப்படவுள்ளது. இந்த முன்னெடுப்பு பெட்ரோல், டீசல் எரிபொருளில் இருந்து மின்சார வாகனத்தை நோக்கி மக்களை நகர்த்துவதற்காக செய்யப்படுகிறது.

டெல்லியில் ஒவ்வொரு 3 கி.மீட்டர்களுக்கும் இடையும் சார்ஜிங் நிலையம் அமைக்கப்படவுள்ளது.  இந்த திட்டத்திற்கு டெல்லியை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் அங்கு கடந்த மார்ச் மாதம் வாங்கப்பட்ட வாகனங்களில் 19 சதவீதம் மின்சார வாகனங்களே ஆகும். இதில் 10,707 வாகனங்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5,888 வாகனங்கள் இருசக்கர வாகங்களாகும் என கூறினார்.

இந்த திட்டத்தை தொடர்ந்து அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து மேலும் 100 சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்படும் எனவும் கூறியுள்ளார்.

தற்போது டெல்லியில் 1 யூனிட் சார்ஜ் ரூ.10க்கு விற்பனையாகி வரும் நிலையில் இந்த இலவச திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News