கார்
டெஸ்லா

சுமார் 10 லட்சம் கார்களை விற்று டெஸ்லா சாதனை

Published On 2022-04-05 11:38 GMT   |   Update On 2022-04-05 11:38 GMT
சீனாவில் ஊரடங்கு பிரச்சனை இருந்தபோதும் இத்தகைய விற்பனையை டெஸ்லா எட்டியுள்ளதற்கு டெஸ்லா அணி தான் காரணம் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனம் உலகின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது.

இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் 2021 முதல் இந்த ஆண்டு மார்ச் 2022 வரை சுமார் 10 லட்சத்திற்கும் மேலான கார்களை விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 048 கார்கள் இந்த ஆண்டு முதல் காலாண்டில் விற்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 67 சதவீதம் அதிகம்.

டெஸ்லா மாடல் எஸ் மற்றும் டெஸ்லா மாடல் ஒய் கார்கள் கடந்த ஆண்டு 24,964 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. இந்த ஆண்டு முதல் காலாண்டில் 14,724 யூனிட்டுகள் எஸ் மற்றும் ஒய் மாடல்களில் விற்பனையாகியுள்ளது. 

உலகம் முழுவதும் லாஜிஸ்டிக்ஸ் பிரச்சனை மற்றும் சிப் பற்றாக்குறை பிரச்சனை ஆட்டோமொபைல் சந்தையை பலவீனப்படுத்தியுள்ளது. இருப்பினும் டெஸ்லா அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சீனாவில் ஊரடங்கு பிரச்சனை இருந்தபோதும் இத்தகைய விற்பனையை டெஸ்லா எட்டியுள்ளதற்கு டெஸ்லா அணி தான் காரணம் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News