கார்
10,000 கார்களை திரும்பி பெற்ற ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்- பிரச்சனை இதுதான்
கடந்த மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏர்பேக் பிரச்சனை காரணமாக 2 லட்சம் யூனிட்டுகள் எஸ்.யூ.வியை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சுமார் 10,119 காரை அமெரிக்காவில் திரும்ப பெற்றுள்ளது. தயாரிப்பின் போது ரியர் சஸ்பென்ஷனில் ஏற்பட்ட பிரச்சனை தான் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 மற்றும் 2022-ம் ஆண்டு டிகுவான், 2022 டாவோஸ் ஆகிய காம்பெக்ட் கிராஸ் ஓவர் கார்கள் மேற்கூறிய தயாரிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன.
ரியர் சஸ்பென்ஷன் பிரச்சனையால் பின்பக்கம் உள்ள இடது அல்லது வலது பக்கம் உள்ள கினக்குல்கள் உடைந்துக்கொள்கின்றன.
திரும்ப பெறப்பட்ட கார்களில் 6 சதவீதம் பின்பக்க கினக்கில் பிரச்சனைகளே காரணம் என கூறப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த பிரச்சனை குறித்து தகவல் அனுபி வருகிறது. குறிப்பாக டிகுவான், டாவோஸ் வாகனம் வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள ஃபோக்ஸ்வேகன் டீலரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளன. பிரச்சனை எதுவும் இருந்தால் கூடுதல் செலவு எதுவும் இல்லாமல் இரண்டு கினக்கில்களும் மாற்றித்தரப்படும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவை தாண்டி பிறநாடுகளுக்கும் இந்த பிரச்சனை இருக்குமா என சரிபார்க்கப்படுகிறது.
அதேபோல கடந்த மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏர்பேக் பிரச்சனை காரணமாக 2 லட்சம் யூனிட்டுகள் எஸ்.யூ.வியை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.