கார்
நாடு முழுவதும் 1,500 மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவவுள்ளதாக அதானி அறிவிப்பு
இந்தியாவிற்கு பசுமை ஆற்றலை வழங்கும் வாய்ப்பை தாங்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து இந்திய மக்கள் மின்சார வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மின்சார கார்கள், பைக்குகள், ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன.
இந்நிலையில் உலக அளவில் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றான அதானி குழுமம் இந்திய மின்சார வாகன சந்தையில் களமிறங்கியுள்ளது. இந்தியா முழுவதும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதானி குழுமம் நிறுவ திட்டமிட்டுள்ளது.
அதானி குழுமமும், பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸும் சேர்ந்து முதல் மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷனை அகமதாபாத்தில் நிறுவியுள்ளன. மேலும் நாடு முழுவதும் 1500 மின்சார வாகனங்களை நிறுவவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
தேவையை பொறுத்து கூடுதலாக சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு பசுமை ஆற்றலை வழங்கும் வாய்ப்பை தாங்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.