கார்
கியா ஈவி6 கார்

கியா அறிமுகம் செய்யவுள்ள மின்சார கார்- என்னென்ன அம்சங்கள் தெரியுமா?

Published On 2022-03-25 07:36 GMT   |   Update On 2022-03-25 07:36 GMT
ஏற்கனவே கியா ஈவி6 உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள காரிலும் இடம்பெறும் என கூறப்படுகிறது.
கியா நிறுவனம் விரைவில் கியா ஈவி6 என்ற புதிய மின்சார கார் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கார் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கியா ஈவி6 உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள காரிலும் இடம்பெறும் என கூறப்படுகிறது.

இதன்படி ஈவி6 58.0 kWh யூனிட் மற்றும் 77.4 kWh யூனிட் என்ற இரண்டு பேட்டரி வேரியண்டுகளில் வெளி வருகிறது.

58.0 kWh பேட்டரியில் 168kW பின்பக்க மோட்டார் தரப்பட்டிருக்கும். இது 168 ஹார்ஸ்பவரை உருவாக்கக்கூடியது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 373 கி.மீ வரை செல்லும் என கூறப்படுகிறது. மற்றொரு வேரியண்டான 77.4kWh பேட்டரி கொண்ட காரில் 168kW பின்பக்க மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 225 ஹார்ஸ்பவரை உருவாக்ககூடியது. இந்த கார் 500 கி.மீ ரேஞ்ச் வரை செல்லும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த ஈவி6 காரில் 2900mm வீல் பேஸ் வழங்கப்பட்டிருக்கும், டேஷ்போர்டில் 2 ஸ்கிரீன்கள் தரப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய ஸ்கீரினில் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டமும், இரண்டாவது ஸ்க்ரீனில் டிஜிட்டல் டயலும் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ள இந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ.25.5 லட்சமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News