கார்
மெர்சிடிஸ் பென்ஸ்

ஓட்டுநரை தொந்தரவு செய்யாமல் காரில் வீடியோ பார்க்கலாம்: மெர்சடிஸ்-பென்ஸ் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி

Published On 2022-03-21 13:44 IST   |   Update On 2022-03-21 13:44:00 IST
பயணிகள் வீடியோக்களை பார்க்கும்போது ஓட்டுநர் தொந்தரவு அடைந்து கவனம் சிதறாமல் இருக்க இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெர்செடிஸ் - பென்ஸ் நிறுவனம் புதிய EQS மின்சார எஸ்.யூ.வி ரக கார் ஒன்றை ஏப்ரல் மாதம் 19-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த காரில் முன்பக்கம் அமர்ந்திருக்கும் பயணிகள் ஓட்டுநரை தொந்தரவு செய்யாமல் வீடியோக்களை பார்க்கும் புதிய அம்சம் ஒன்றையும் அந்நிறுவனம் கொண்டு வரவுள்ளது.

இந்த காரில் 56 இன்ச் MBUX ஹைப்பர்ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகள் அதிஅற்புதமான டிஜிட்டல் அனுபவத்தை பெற முடியும்.  மேலும் 12.3 இன்ச் OLED டிஸ்பிளேவில் முன்பக்கத்தில் அமர்ந்துள்ள பயணி வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும். 

பயணிகள் ஹெட்போன்களை அணிந்து கொண்டு ஓட்டுநருக்கு தொந்தரவு இல்லாமல் வாகனத்தை ஓட்டலாம். அதேசமயம் மற்றொரு புதிய தொழில்நுட்பம் ஒன்றும் இந்த காரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஓட்டுநர் பயணிகளுடைய திரையில் உள்ள வீடியோக்களை பார்க்க நினைத்தால் தானாக திரை மங்கிவிடும். அதுமட்டுமில்லாமல் ஓட்டுநரின் கண்கள் செல்லும் திசையை கண்காணிக்கும் அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளது.

பயணிகள் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

Similar News