கார்
ரஷியா - உக்ரைன் போர் எதிரொலி: எகிறப்போகும் மின்சார வாகனங்களின் விலை?
ரஷிய- உக்ரைனுக்கு எதிரான போரினால் உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் மின்சார வாகனங்களின் விலையும் அதிகரிக்கப்போகிறது.
ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 2 வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரினால் உலகளவில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த போரின் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயர்வை எட்டியுள்ளன. இந்நிலையில் தற்போது ஆட்டோமொபைல் துறையில் மூலப் பொருட்களின் விலையும் தொடந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷிய போர் காரணமாக நிக்கலின் விலை 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. லித்தியத்தின் விலையும் இரட்டிப்பாகியுள்ளது.
இதனால் மின்சார கார்கள் தயாரிப்பு மூலப் பொருட்களின் விலை சரமாரியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மின்சார கார்களின் விலையை ஏற்ற வேண்டிய சூழலுக்கு டெஸ்லா உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஷியா - உக்ரைன் போரினால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உலக அளவில் உயர்ந்து வரும் நிலையில் பொதுமக்கள் மின்சார வாகனங்கலை நோக்கி செல்கின்றனர்.
இந்நிலையில் தற்போது ரஷிய போரினால் மின்சார கார்களின் விலை 35 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.