கார்
எலான் மஸ்க்

எதிர்காலத்தில் வாகனங்களால் இந்த பிரச்சனை வரும்- எச்சரித்த எலான் மஸ்க்

Published On 2022-03-07 10:36 GMT   |   Update On 2022-03-07 10:36 GMT
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனமே தானியங்கி கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் அவர் பேசியுள்ளார்.
ஓட்டுநர்கள் இல்லாத தானியங்கி கார்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனம் தானியங்கி கார் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருந்து வருகிறது. அந்த நிறுவனம் தற்போது செமி-ஆட்டோனமஸ் டிரைவிங் மென்பொருளை மின்சார வாகன நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது. இது தவிர் தற்போது எஃப்.எஸ்.டி எனப்படும் முழுதாக தானியங்கி முறையில் ஓடும் கார்களையும் உருவாக்கி வருகிறது.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியதாவது:-

எதிர்காலத்தில் தானியங்கி வாகனங்கள் மக்கள் பயனிப்பதை எளிதாக்கும் என்பதால்,  மக்கள் கூடுதலாக வாகனங்களை வாங்க முற்படுவர். இதனால் சாலையில் செல்லும் வாகனங்களும் அதிகரிக்கும். போக்குவரத்து நெரிசலும் அதிகமாகும். இதை தவிர்க்க முடியாது. ஆனால் தானியங்கி கார்கள் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் வேதனையை குறைக்கும்.

இவ்வாறு எலான் மஸ்க் கூறியுள்ளார்.

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனமே தானியங்கி கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை அவர் பேசியுள்ளார்.
Tags:    

Similar News