கார்
ஹோண்டா- சோனி

சோனி, ஹோண்டா இணைந்து தொடங்க இருக்கும் புதிய நிறுவனம்- இது தான் திட்டம்..

Published On 2022-03-05 13:42 IST   |   Update On 2022-03-05 13:42:00 IST
இந்த புதிய நிறுவனம் இந்த ஆண்டே தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பானை சேர்ந்த இரண்டு பெரிய நிறுவனங்களான சோனியும், ஹோண்டாவும் இணைந்து புதிய மின்சார வாகனம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளன. இதன்மூலம் நவீன தொழில்நுட்பத்துடனான மின்வாகனங்களை தயாரிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளன.

ஜாயிண்ட் வெஞ்சர் அடிப்படையில் தொடங்கப்படும் இந்த நிறுவனத்தில் வாகன உற்பத்தியோடு, அதிக திறன் வாய்ந்த மின்வாகன பேட்டரிக்களையும் விற்பனை செய்யப்போவதாக கூறப்படுகிறது.

இந்த புதிய நிறுவனத்தை இந்த ஆண்டே தொடங்குவதற்கு இரு நிறுவனங்களும் திட்டமிட்டு வருகின்றன.



இந்த புதிய நிறுவனத்தில் ஹோண்டா நிறுவனம் வாகன பாகங்கள் தயாரிப்பு, விற்பனைக்கு பிறகான சேவை உள்ளிட்டவைகளை பார்த்துகொள்ளும். சோனி நிறுவனம், இமேஜிங், சென்சார், தொலைத்தொடர்பு, நெட்வொர்க், கேளிக்கை ஆகியவற்றில் தனது தொழிநுட்பத்தை வழங்கும்.

இந்த ஆண்டே நிறுவனம் தொடங்கப்பட்டாலும் புதிய நிறுவனத்தின் முதல் ஈ.வி மாடல் வாகனம் 2025-ம் ஆண்டில் தான் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த புதிய நிறுவனத்தில் திட்டமிடுதல், டிசைன், விற்பனை ஆகியவை நடைபெறும் என்றும், உற்பத்தி ஹோண்டாவின் உற்பத்தி நிலையங்களில் தான் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Similar News