கார்
பஞ்சர் ஆகாத டயரை உருவாக்கி வரும் பிரபல டயர் நிறுவனம்
இந்த வகை டயர்கள் செலவீனங்களை குறைக்கவும், பொருட்கள் வீணாவதை தடுக்கவும் பயன்படும் என கூறப்பட்டுள்ளது.
மிச்செலின் நிறுவனம் பஞ்சர் ஏற்படாத டயர் அமைப்பை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளது. அடுத்த தலைமுறை செவ்ரொலெட் போல்ட் மின்சார வாகனங்களுக்காக இந்த அமைப்பை உருவாக்கி வருகிறது.
இந்த வகை டயர்களுக்கு ’மிச்செலின் அப்டிஸ்’ என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. இந்த வகை டயர்கள் அடுத்த 3 முதல் 5 வருடங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
செவ்ரோலெட் நிறுவனம் புதிய தலைமுறைக்கான செவி போல்ட் மின்சார காரை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் 2025-ல் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த கார் முழுவதும் பஞ்சர் ஆகாத ( காற்று அடைக்கப்படாத டயரை) டயரை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டே இந்த வகை டயரை உருவாக்கி தற்போது இதன் மேம்படுத்தப்பட்ட டயரை உருவாக்குவதற்காக 50 பேட்டண்ட்களை மிச்செலின் நிறுவனம் பதிவு செய்துள்ளது.
இந்த வகை டயர்கள் செலவீனங்களை குறைக்கவும், பொருட்கள் வீணாவதை தடுக்கவும் பயன்படும் என கூறப்பட்டுள்ளது.