கார்
மகிந்திரா எக்ஸ்யுவி700 கார்

புது கார் வேண்டுமா? வாங்காமலேயே வீட்டிற்கு எடுத்து செல்லலாம்- மகிந்திராவின் சூப்பர் அறிவிப்பு

Published On 2022-02-18 16:15 IST   |   Update On 2022-02-18 16:29:00 IST
மகிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
மகிந்திரா நிறுவனம் தனது Mahindra XUV700 மற்றும் புதிய Thar SUV மாடல் கார்களுக்கு சந்தா சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இதற்காக குயிக்லிஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து மகிந்திரா செயல்படுகிறது. இதன்படி, மகிந்திராவின் காரை வாங்க முடியாதவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு வாடகைக்கு எடுக்கலாம்.

வாடகை காலம் முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் காரை திரும்ப அளிக்கலாம். இல்லையென்றால் அதே கார் அல்லது தாங்கள் விரும்பும் வேறு புதிய காரை மீண்டும் வாடகைக்கு எடுக்கலாம். இந்த திட்டத்தில் ஒரு காரை 24 முதல் 60 மாதங்கள் வரை வாடகைக்கு எடுக்க முடியும்.  அல்லது ஆண்டுக்கு 10,000 கிமீ வரை வாடகை என்ற திட்டங்களையும் தேர்வு செய்யலாம்.



இதற்கு வாடகை மாதம் ரூ.21,000 என்ற விலையில் இருந்து தொடங்குகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் பெட்ரோலைத் தவிர வேறு எதற்கும் செலவழிக்க வேண்டியதில்லை. காப்பீடு, பராமரிப்பு மற்றும் சாலையோர உதவி அனைத்தையும் நிறுவனமே ஏற்கும்.

இந்த சந்தா வசதி தற்போது ​​மும்பை, புனே, டெல்லி, நொய்டா, குருகிராம், பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

காரை வாடகைக்கு எடுக்க விரும்புபவர்கள் மஹிந்திரா ஆட்டோ போர்ட்டல் அல்லது டீலர்ஷிப்புக்கு சென்று முன்பதிவு செய்ய வேண்டும்.

Similar News